குழந்தை கவி...







குழந்தையாக நாம் இருந்து வியந்து காலம் எல்லாம் மறந்து காலம் முழுதும் கையில் உள்ள தொடுதிரையில் .....

சிறுசிறு அதிசயம்
அலர கண்ட
காலம்!
பேச்சிலும் செயலிலும்
மழலையாக இருந்த
நானும்!
முகநூல் வலையொளி
கீச்சகம் எல்லாம்
அறியேன்!
இவை அனைத்தும்
இப்போது நானும்
எறியேன்!
ஏன் இந்த
மாற்றம் எல்லாம்
எனக்குள்ளே?
மழலை நினைவு
எல்லாம் நிழலாடும்
நமக்குள்ளே!
கேலி சித்திரம்
எல்லாம் கேலியாய்
பார்த்து!
அந்த கேலி
சித்திரமாய் நடித்து
வியந்து!
முகம் முழுதும்
கலப்பில்லா புன்னகை
ஏந்தி!
வாழ்ந்த காலம்
எல்லாம் நீயும்
சிந்தி!
மழலையாக இருந்த 
காலம்! திரும்புமோ
நேரம்?....
                 -முவிக

Comments

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ