Posts

Showing posts from March, 2020

ஐந்து ரூபாய் நாணயம்

Image
வணக்கம் தோழமைகளே,                                         நான் சில சிறுகதைகளை எனது குறிப்பேட்டில் எழுதி இருக்கிறேன். ஆனால் முதன் முறையாக தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்துள்ளேன் ஆதரவு தாருங்கள்.. ஐந்து ரூபாய்........                           அமைதியான இரவு யாரும் இல்லா மொட்டை மாடி. தனிமையில் படுக்கை விரிப்புகளுடன் சென்றேன் அந்த மாடிக்கு படுத்து உறங்க. உறங்கச் சென்ற எனக்கு உறக்கம் வரவில்லை. தலைக்கு அருகில் இருந்த கைபேசியைப் பார்த்தேன். அதை கையில் எடுத்தேன் அது என்னைப் பார்த்தது பார்த்தவுடன் திறந்தது ஏனெனில் முகத்திறப்பு அமைப்பு அமலில் இருந்தது. அது திறக்காமல் இருந்தாலும் "மணி" பார்த்து வைத்திருப்பேன். திறந்தவுடன் தெரிந்தது புலணத்தின் (whats app) குறுஞ்செய்திகள். " ஆயிரத்து ஐந்நூற்று ஐப்பத்தைந்து " என மேல பார்த்தவுடன் உடனே செய்திகளை ஆரம்பித்தேன். " டேய் " , " டேய் " விக்கி.......... என்ற அழைப்புச் சத்தம் கேட்டு அலர்ந்து போய் கையில் இருந்ததை கீழே வைத்தேன். ஏனென்றால் அது அம்மாவின் சத்தம். நான் தூங்கியது போல நடித்துவிட்டேன். ஒரு பழமொழ

ஒரு சொல் கவிதை

நடமாடும் நிலவு அவள் !!.....               - கதிர் சென்றேன் செய்தேன் வென்றேன்            - கதிர் நீ வா தீ   - கதிர் போய் வா காதலே       - கதிர் காயங்கள் தீர்க்கும் காதல்       - கதிர் மண்ணிலே முத்தமிடும் நிலவு !!!....           - கதிர் வேட்டி சட்டையோடு பாம்பொன்று              - கதிர் பட்டு உடுத்திய சிட்டு       - கதிர் வேலை செய்யும் காளை          - கதிர் இதயத்தில் இடம்பிடித்தால் இளந்தென்றல்                - கதிர் கயிறிட்டு இழுத்தாள் இதயத்தை            - கதிர் கருப்பு வைரம் வீதியிலே         - கதிர் கோடையில் மழையாய் இன்பம்          - கதிர் காலத்தின் கருவாக க(வி)தை        - கதிர் முகம் மாற்றும் சிரிப்பு        - கதிர் துப்பாக்கியின் முனையில் துணையாய்           - கதிர்

ஹைக்கூ

சுவர் இன்றி சித்திரம் வரைகிறேன் என் மனச் சுவரில்                           - கதிர்

ஹைக்கூ

காதலி முகம் கண்டவுடன் மதி இழந்தான் அழகிய மதிவானன்                               - கதிர்

ஹைக்கூ

கள்ள சிரிப்பு செய்து காரிருள் வெளுக்க வைத்தால் கள்ளச்சி !!!....                                 - கதிர்

ஹைக்கூ

தேன் போல சுவைக்கிறேன் தனித் தமிழை உணர்கிறேன் உள்ளத்தில்                                 - கதிர்

ஹைக்கூ

காட்டில் பரவும் தீயைப் போல ஓடுகிறது புரளிகள் ஒளியோடு...                             - கதிர்

ஹைக்கூ

தலைப்பு இன்றி எழுதுகிறேன் தரணியில் உலர்கிறேன் நான் கவிஞன் !                           - கதிர்

ஹைக்கூ

காயங்கள் அலைந்து கலைந்தது குருதி ஆற்றில் கல் எறியப்பட்டு                            - கதிர்

ஹைக்கூ

தமிழ் என்னும் மதத்திலும் இனத்திலும் நான் எழுத்தாக வாழ்கிறேன்                                  - கதிர்

ஹைக்கூ

தீ எறியும் விளக்கினில் விழச் செய்தேன் அதன் குடிநீரை                            - கதிர்

ஹைக்கூ

அக்னி சிறகுகள் எனக்குள்ளே சிறகடிக்குது ஒரு காகித சிறகோடு...                    - கதிர்

இனையக் காதலன்...

பகிரியில் காதலித்தேன் பக்க கவிதைகள் பேசவில்லை கனாக்காணும் காலங்கள் என் வாழ்வில் கிடையாது காணொளி காதல்கள் என் வாழ்வில் பலவுண்டு புலணத்தின் புரட்டலில் என் உரையாடல் பல இருக்கு அன்பின் பரிமமாற்றம் அளவும் இல்லையடா - அன்பை அளக்க என்னவில்லை அளந்தாலும் ஒன்றும் இல்லை ஊமையாய் இருந்துவிட்டு குரலஞ்சல் அனுப்புகிறாள் உன்னை நான் காதலிக்கேன் உன் பதில் என்னவென்று திகைத்து நின்றேனா தித்தித்து நின்றேனா நின்றதே தெரியவில்லை நித்தமும் புரியவில்லை தூரத்தில் இருந்தாளே கைக்குள்ளே சிரித்தாளே சித்திர புகைப்படமாக.... எண்ணை மாற்றி அழைத்தே என்னை அவள் காதலித்தால் என்ன காதல் இதுவென்று மனித குலம் பேசுதடா பேச்சுக்கள் புதிதல்ல கேட்பதும் புதிதல்ல காதல் தான் புதிதென்று காத்திருந்தேன் புலணத்தில் காதலி குரல் கேட்க குரலஞ்சல் எதிர் நோக்கி என் இதயத்தை தின்றுவிட்டாள் அவள் இதயத்தில் கக்கிவிட்டாள்... காதோரம் அழைத்துவிட்டு கால்கடுக்க அலையவிட்டாள் கானொளி அழைப்பில் - வந்து இதுபோதும் என்றுரைத்தாள் நான் மெழுகாக உருகினாலும் கதிராக கருகினாலும் என் காதலி மதிமுகம் மட்டும் கடுகளவும் கரையவில்லை புன்

கவிக்கொரு விண்ணப்பம் கவியாக

கவியே!...... உனக்கொரு விண்ணப்பம் கவியாக வைக்கிறேன் கேளு!..... உன்னோடு காலை எழுகிறேன் நீயின்றி நானும் அழுகிறேன் கட்டங்கள் அற்று நிற்கிறாய் பட்டங்கள் யாவும் தருகிறாய் தாயுள்ளம் கொண்ட தமிழை தரணியில் தூக்கி நிற்கின்றாய் சந்தங்களில் சத்தம் ஏற்றி சதம் ஆண்டுகளை கடக்கிறாய் கடைசியில் நிற்கும் என்னை கவிதை எழுத்தாக ஆக்கிவிடேன் விண்ணப்பம் ஏற்று நீயும் பதில் கவிதான் அனுப்பிவிடேன்                               - கதிர்

ஆளுமைக் கொண்ட தாய்......

வண்ண பட்டாம்பூச்சி பிறக்கும் முன் - வாடகை கூட்டில் புழுவாய் அமர்ந்திருப்பது போல அழகாய் அமர்ந்திருந்தேன் அவள் வயிற்றில் அழகியின் ஆளுமையோடு அதட்டல் பூக்கும் முகம் கண்டு - பதட்டத்தோடு வியந்து நின்றேன் அன்பென்னும் ஆயுதம் ஏந்தி ஆளுமை செய்து இருள் சூழ்ந்த இதயத்தில் மதி ஒளி தந்தாள்...... கடலளவு வாழ்க்கையில் கரை கடந்தேன் அழகியின் ஆளுமையோடு....                              - கதிர்

கொரோனாவிற்க்கு கவிக்கடிதம்....

விழியில் கண்ணீர் வடிய கவிக்கடிதம் உனக்கு எழுதுகிறேன் உலகையே உலுக்கி நீயும்! ஊரடங்க செய்துவிட்டாய்!...... அஞ்சாத நெஞ்சங்களில் அச்சம் விதைத்து முளைக்க செய்துவிட்டாய் பச்சிளங் குழந்தைகளையும் காவுப்பெறத் துடிக்கின்றாய் உலக உயிர்களை உயிர்க்கொல்லி நீ! உறிந்தாய் பட்டன மனிதரையும் பட்டினியில் பதறடித்தாய் நீ!  உண்ணும் நஞ்சென்ன?  உலகமே கேட்குதய்யா!... ஓடி! ஓடி! பரவும் நீயும் ஓய்வெடுக்க உறங்குவாயா? என் சொந்த பந்தமெல்லாம் சுகம் காண வேண்டுமையா!.......                          - கதிர்