Posts

Showing posts with the label புதுக்கவிதை

காதல்

காணாத உன்னை கண்டவுடனே காணாத காட்சியெல்லாம் கனவுக்குள்ளே             - கதிர் கார்க்கி

காலம் நமதே

 கணவுகள் மெய்ப்படும் கலையாதே காயம் வருடிடும் கலங்காதே காலம் நமதே!                 - கதிர் கார்க்கி

புதுக்கவிதை

ஒதுக்கப்படுவதற்க்குள்  ஒதுங்கி விடு   ஒரு மரியாதை கிடைக்கும்               - கதிர் கார்க்கி

டோபமைனே!

 ஆசைகள் ஏதுமின்றி அடிமையாய் மாறுகிறேன் காரணம் நீதானோ டோபமைனே!                   - கதிர் கார்க்கி

தேடுமா?

 யாருமில்லா உலகமொன்று எனக்கென கிடைக்குமா? அங்கு ஈகை இன்பம் இரக்கம் நிரந்தரமாகுமா? இல்லை அங்கும் என்னுயிர் இவற்றைத் தேடுமா?                 - கதிர் கார்க்கி

இனையக் காதலன்...

பகிரியில் காதலித்தேன் பக்க கவிதைகள் பேசவில்லை கனாக்காணும் காலங்கள் என் வாழ்வில் கிடையாது காணொளி காதல்கள் என் வாழ்வில் பலவுண்டு புலணத்தின் புரட்டலில் என் உரையாடல் பல இருக்கு அன்பின் பரிமமாற்றம் அளவும் இல்லையடா - அன்பை அளக்க என்னவில்லை அளந்தாலும் ஒன்றும் இல்லை ஊமையாய் இருந்துவிட்டு குரலஞ்சல் அனுப்புகிறாள் உன்னை நான் காதலிக்கேன் உன் பதில் என்னவென்று திகைத்து நின்றேனா தித்தித்து நின்றேனா நின்றதே தெரியவில்லை நித்தமும் புரியவில்லை தூரத்தில் இருந்தாளே கைக்குள்ளே சிரித்தாளே சித்திர புகைப்படமாக.... எண்ணை மாற்றி அழைத்தே என்னை அவள் காதலித்தால் என்ன காதல் இதுவென்று மனித குலம் பேசுதடா பேச்சுக்கள் புதிதல்ல கேட்பதும் புதிதல்ல காதல் தான் புதிதென்று காத்திருந்தேன் புலணத்தில் காதலி குரல் கேட்க குரலஞ்சல் எதிர் நோக்கி என் இதயத்தை தின்றுவிட்டாள் அவள் இதயத்தில் கக்கிவிட்டாள்... காதோரம் அழைத்துவிட்டு கால்கடுக்க அலையவிட்டாள் கானொளி அழைப்பில் - வந்து இதுபோதும் என்றுரைத்தாள் நான் மெழுகாக உருகினாலும் கதிராக கருகினாலும் என் காதலி மதிமுகம் மட்டும் கடுகளவும் கரையவில்லை புன்...

கவிக்கொரு விண்ணப்பம் கவியாக

கவியே!...... உனக்கொரு விண்ணப்பம் கவியாக வைக்கிறேன் கேளு!..... உன்னோடு காலை எழுகிறேன் நீயின்றி நானும் அழுகிறேன் கட்டங்கள் அற்று நிற்கிறாய் பட்டங்கள் யாவும் தருகிறாய் தாயுள்ளம் கொண்ட தமிழை தரணியில் தூக்கி நிற்கின்றாய் சந்தங்களில் சத்தம் ஏற்றி சதம் ஆண்டுகளை கடக்கிறாய் கடைசியில் நிற்கும் என்னை கவிதை எழுத்தாக ஆக்கிவிடேன் விண்ணப்பம் ஏற்று நீயும் பதில் கவிதான் அனுப்பிவிடேன்                               - கதிர்

ஆளுமைக் கொண்ட தாய்......

வண்ண பட்டாம்பூச்சி பிறக்கும் முன் - வாடகை கூட்டில் புழுவாய் அமர்ந்திருப்பது போல அழகாய் அமர்ந்திருந்தேன் அவள் வயிற்றில் அழகியின் ஆளுமையோடு அதட்டல் பூக்கும் முகம் கண்டு - பதட்டத்தோடு வியந்து நின்றேன் அன்பென்னும் ஆயுதம் ஏந்தி ஆளுமை செய்து இருள் சூழ்ந்த இதயத்தில் மதி ஒளி தந்தாள்...... கடலளவு வாழ்க்கையில் கரை கடந்தேன் அழகியின் ஆளுமையோடு....                              - கதிர்

கொரோனாவிற்க்கு கவிக்கடிதம்....

விழியில் கண்ணீர் வடிய கவிக்கடிதம் உனக்கு எழுதுகிறேன் உலகையே உலுக்கி நீயும்! ஊரடங்க செய்துவிட்டாய்!...... அஞ்சாத நெஞ்சங்களில் அச்சம் விதைத்து முளைக்க செய்துவிட்டாய் பச்சிளங் குழந்தைகளையும் காவுப்பெறத் துடிக்கின்றாய் உலக உயிர்களை உயிர்க்கொல்லி நீ! உறிந்தாய் பட்டன மனிதரையும் பட்டினியில் பதறடித்தாய் நீ!  உண்ணும் நஞ்சென்ன?  உலகமே கேட்குதய்யா!... ஓடி! ஓடி! பரவும் நீயும் ஓய்வெடுக்க உறங்குவாயா? என் சொந்த பந்தமெல்லாம் சுகம் காண வேண்டுமையா!.......                          - கதிர்

சாதி வேண்டாம்...

சாதி பெயரில் பொது வீதி இது என்ன ஊர் நீதி இதனால் வருமே பல தோல்வி இது ஏனோ என் கேள்வி இதற்கு வருமோ ஒரு வேள்வி               -முவிக

மகத்துவ மகடூஉ

தோலுறை சுற்றிட்ட சதை அல்ல பெண் அடவி குடிகொன்ட காளி சொருபம் பெண் நல் நானமும்அதி நாணமும் உடையாள் பெண் காமம் கொண்ட கயவர்களை கதியற்று ஆக்கிடுவாள் பெண் பசு இருக்கும் பண்ணை அதை காக்கும் அன்னை மங்கை உற்றது நீக்கும் உடனுற்ற தங்கை மங்கை ஆதலால் மாதரை மாதராய் என்னி மகத்துவ மகடூஉவாக்குவோம்.                                 -முவிக

மழையே...

Image

அன்பு தங்கையே...

உலகம் தந்த அழகிய மங்கை நீதானே என் அன்புத் தங்கை தந்திடுவேன் என் அன்பு பங்கை வைரம் வைடூரியம் தரா விடிலும் தந்திடுவேன் என் அன்பை அணியாக்கி உனக்கு அன்பு தருவதை பணியக்கி தந்திடுவேன் மன அன்பை தனியாக்கி சிறு சிறு சண்டை உன்னோடு உன் அன்பை பெற திண்டாடு என் தினப்பாடு வாழ்வில் நீயும்-முன்னேறு நீவெற்றி பெற இடுவேன் திருநீறு                   -முவிக

கீழடி

அடி அடியாய் அகழ்ந்திட்ட அகழ் மொத்தம் கீழடியாய் இடி இடியாய் இடித்திடுமே நம் தமிழ் அன்னையை இழி இழியாய் செய்தோர்-மனம் பதை பதையாய் பதைத்திடுமே உதை உதையாய் உதைத்திடுவோம்-அன்னையை அழி அழியாய் அழிக்க எண்ணிய அற்ப்ப பதர்களை                 -முவிக

குழந்தை கவி...

குழந்தையாக நாம் இருந்து வியந்து காலம் எல்லாம் மறந்து காலம் முழுதும் கையில் உள்ள தொடுதிரையில் ..... சிறுசிறு அதிசயம் அலர கண்ட காலம்! பேச்சிலும் செயலிலும் மழலையாக இருந்த நானும்! முகநூல் வலையொளி கீச்சகம் எல்லாம் அறியேன்! இவை அனைத்தும் இப்போது நானும் எறியேன்! ஏன் இந்த மாற்றம் எல்லாம் எனக்குள்ளே? மழலை நினைவு எல்லாம் நிழலாடும் நமக்குள்ளே! கேலி சித்திரம் எல்லாம் கேலியாய் பார்த்து! அந்த கேலி சித்திரமாய் நடித்து வியந்து! முகம் முழுதும் கலப்பில்லா புன்னகை ஏந்தி! வாழ்ந்த காலம் எல்லாம் நீயும் சிந்தி! மழலையாக இருந்த  காலம்! திரும்புமோ நேரம்?....                  -முவிக

இயற்கைக்கு துரோகம் செய்யலாமா.......✍

Image
தமிழை விரும்பி உலகை உலவி தமிழை கற்கும் மனிதமே கேளும் உம் கையை உயர்த்தும் இயற்கையை காக்கும் கடமை உன்னிடத்து இல்லையோ? ஞாயிறு தந்த சோதியில் வந்த மூலிகை முடக்கினாயே முகில் தந்த நீரில் வந்த மூங்கிலை அழித்தாயே சகாயம் தந்த குன்றில் வந்த ஏரியில் சாயமிட்டாயே சேலை தந்த சோலையில் வந்த பருத்தியில் விடம்வைத்தாயே வாழ்வாங்கு வாழ்ந்த நிலத்தை நீவாழ  வறன்டிட வைத்தாயே இறைவன் தந்த இறைவிகருவில் வந்த நின் மனதினில் இயற்கை ஈன்பாயே மக்கள் காக்க ஆசான்வழி நிற்கும் மாணாக்கன் நீ மக்கள் நலம் காக்க பாரே இயற்கையில் செழிக்கும்                   -முவிக

வலுவில்லா உயிரில்லை

கோழை என கொந்தழிக்க அந்த கோழி வாயிலும் நஞ்சு இருக்கும்! பாலை குடித்து வளர்ந்த பிள்ளை வலிமை அற்ற வண்டன என்ன விடமதை கக்கும் படம் எடுக்கும் பாம்பு அந்த பால் பிள்ளை! பராசக்தி பெற்ற எந்த உயிரும் வலு அற்றவையே                -முவிக