Posts

Showing posts from November, 2019

அன்பு தங்கையே...

உலகம் தந்த அழகிய மங்கை நீதானே என் அன்புத் தங்கை தந்திடுவேன் என் அன்பு பங்கை வைரம் வைடூரியம் தரா விடிலும் தந்திடுவேன் என் அன்பை அணியாக்கி உனக்கு அன்பு தருவதை பணியக்கி தந்திடுவேன் மன அன்பை தனியாக்கி சிறு சிறு சண்டை உன்னோடு உன் அன்பை பெற திண்டாடு என் தினப்பாடு வாழ்வில் நீயும்-முன்னேறு நீவெற்றி பெற இடுவேன் திருநீறு                   -முவிக

கீழடி

அடி அடியாய் அகழ்ந்திட்ட அகழ் மொத்தம் கீழடியாய் இடி இடியாய் இடித்திடுமே நம் தமிழ் அன்னையை இழி இழியாய் செய்தோர்-மனம் பதை பதையாய் பதைத்திடுமே உதை உதையாய் உதைத்திடுவோம்-அன்னையை அழி அழியாய் அழிக்க எண்ணிய அற்ப்ப பதர்களை                 -முவிக

குழந்தை கவி...

குழந்தையாக நாம் இருந்து வியந்து காலம் எல்லாம் மறந்து காலம் முழுதும் கையில் உள்ள தொடுதிரையில் ..... சிறுசிறு அதிசயம் அலர கண்ட காலம்! பேச்சிலும் செயலிலும் மழலையாக இருந்த நானும்! முகநூல் வலையொளி கீச்சகம் எல்லாம் அறியேன்! இவை அனைத்தும் இப்போது நானும் எறியேன்! ஏன் இந்த மாற்றம் எல்லாம் எனக்குள்ளே? மழலை நினைவு எல்லாம் நிழலாடும் நமக்குள்ளே! கேலி சித்திரம் எல்லாம் கேலியாய் பார்த்து! அந்த கேலி சித்திரமாய் நடித்து வியந்து! முகம் முழுதும் கலப்பில்லா புன்னகை ஏந்தி! வாழ்ந்த காலம் எல்லாம் நீயும் சிந்தி! மழலையாக இருந்த  காலம்! திரும்புமோ நேரம்?....                  -முவிக

இயற்கைக்கு துரோகம் செய்யலாமா.......✍

Image
தமிழை விரும்பி உலகை உலவி தமிழை கற்கும் மனிதமே கேளும் உம் கையை உயர்த்தும் இயற்கையை காக்கும் கடமை உன்னிடத்து இல்லையோ? ஞாயிறு தந்த சோதியில் வந்த மூலிகை முடக்கினாயே முகில் தந்த நீரில் வந்த மூங்கிலை அழித்தாயே சகாயம் தந்த குன்றில் வந்த ஏரியில் சாயமிட்டாயே சேலை தந்த சோலையில் வந்த பருத்தியில் விடம்வைத்தாயே வாழ்வாங்கு வாழ்ந்த நிலத்தை நீவாழ  வறன்டிட வைத்தாயே இறைவன் தந்த இறைவிகருவில் வந்த நின் மனதினில் இயற்கை ஈன்பாயே மக்கள் காக்க ஆசான்வழி நிற்கும் மாணாக்கன் நீ மக்கள் நலம் காக்க பாரே இயற்கையில் செழிக்கும்                   -முவிக

வலுவில்லா உயிரில்லை

கோழை என கொந்தழிக்க அந்த கோழி வாயிலும் நஞ்சு இருக்கும்! பாலை குடித்து வளர்ந்த பிள்ளை வலிமை அற்ற வண்டன என்ன விடமதை கக்கும் படம் எடுக்கும் பாம்பு அந்த பால் பிள்ளை! பராசக்தி பெற்ற எந்த உயிரும் வலு அற்றவையே                -முவிக