ஆளுமைக் கொண்ட தாய்......

வண்ண பட்டாம்பூச்சி
பிறக்கும் முன் - வாடகை
கூட்டில் புழுவாய்
அமர்ந்திருப்பது போல
அழகாய் அமர்ந்திருந்தேன்
அவள் வயிற்றில்
அழகியின் ஆளுமையோடு
அதட்டல் பூக்கும்
முகம் கண்டு - பதட்டத்தோடு
வியந்து நின்றேன்
அன்பென்னும் ஆயுதம்
ஏந்தி ஆளுமை
செய்து இருள்
சூழ்ந்த இதயத்தில்
மதி ஒளி
தந்தாள்......
கடலளவு வாழ்க்கையில்
கரை கடந்தேன்
அழகியின் ஆளுமையோடு....

                             - கதிர்

Comments

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ