ஐந்து ரூபாய் நாணயம்

வணக்கம் தோழமைகளே,
                                        நான் சில சிறுகதைகளை எனது குறிப்பேட்டில் எழுதி இருக்கிறேன். ஆனால் முதன் முறையாக தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்துள்ளேன் ஆதரவு தாருங்கள்..





ஐந்து ரூபாய்........

                          அமைதியான இரவு யாரும் இல்லா மொட்டை மாடி. தனிமையில் படுக்கை விரிப்புகளுடன் சென்றேன் அந்த மாடிக்கு படுத்து உறங்க. உறங்கச் சென்ற எனக்கு உறக்கம் வரவில்லை. தலைக்கு அருகில் இருந்த கைபேசியைப் பார்த்தேன். அதை கையில் எடுத்தேன் அது என்னைப் பார்த்தது பார்த்தவுடன் திறந்தது ஏனெனில் முகத்திறப்பு அமைப்பு அமலில் இருந்தது. அது திறக்காமல் இருந்தாலும் "மணி" பார்த்து வைத்திருப்பேன். திறந்தவுடன் தெரிந்தது புலணத்தின் (whats app) குறுஞ்செய்திகள். " ஆயிரத்து ஐந்நூற்று ஐப்பத்தைந்து " என மேல பார்த்தவுடன் உடனே செய்திகளை ஆரம்பித்தேன்.

" டேய் " , " டேய் " விக்கி..........

என்ற அழைப்புச் சத்தம் கேட்டு அலர்ந்து போய் கையில் இருந்ததை கீழே வைத்தேன். ஏனென்றால் அது அம்மாவின் சத்தம்.

நான் தூங்கியது போல நடித்துவிட்டேன். ஒரு பழமொழி சொல்வார்கள் " தூங்கியவரை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியாது " என்ற அந்த பழமொழி அப்பொழுது எனக்கு பொருந்தியது.

தாய் எனக்கு அருகில் நின்று

" இன்னைக்கு வெள்ளிக்கிழமை தனியா படுத்திருக்கானே "

என்றுச் சொல்லி கீழே தூங்கச் சென்றுவிட்டார்.

" ஐயோ! " என்ற ஒலி என் மனதிற்குள் ஒலித்தது. சும்மா வந்த அம்மா பயங்காட்டிட்டு போய்டாங்களேனு பதறிபோய் இருந்தேன்.

சும்மாவே தூக்கம் வரல பின்ன என்ன பன்ன வெறும் காலில் மாடியை சுற்றி வந்தேன் அப்போது ஒரு " நாய் " ஐப் பார்த்தேன் அதன் எதிர்புறம் " பூனை " ஐப் பார்த்தேன் அவை இரண்டும் ஒரு குறிப்பிட்டத் தொலைவில் இருந்தது.

                         பூனை ஒலிப்பது குரைப்பது போல தெரிந்தது. " சரி! " என நாயைப் பார்த்தேன் அதன் சத்தம் " மியவ் " " மியவ் " என சாந்தமாக கேட்டது இவை மேன் மேலும் அமானுசியத்தை என்னை நம்ப வைத்தது.

அருகில் குழந்தையின் அழுகைச் சத்தம் "ஆன்.. ஆன்..." என்று. திடீரென  என் தொலைபேசியில் "டிக் டிக் டிக்" என்ற கடிகாரச் சத்தம். இவை யாவும் "அமானுசியத்தை" மேன் மேலும் என் மனதில் ஆழப்படுத்தியது.

                 ஒரு வழியாக அந்த பிரம்மை கலந்த அந்த "அமானுசிய இரவை" கடந்து ஆழ்ந்த தூக்கத்தில் அதிகாலை வேளையில். வீடுகள் அருகில் பேருந்து நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் என்னை எழுப்புவதற்காக வந்த ஒலியாக "கூச்...... கூச்......." என இரயில் சத்தம் கேட்டது ...... "இரயிலா" என எழுந்து அமர்ந்தேன். ஆனால் அது எங்கள் வீட்டில் "மோட்டர் ஓடி தண்ணீர் வந்த சத்தம்"

"ச்ச......" என உச்சுக் கொட்டி விரிப்புகளை மடித்து வைத்தேன்.

மறுபடியும் அம்மா "குளிச்சிட்டு கீழ இறங்கு" என கூச்சலிட்டார்.

மறுபடியும் "ச்ச......."  என உச்சுக் கொட்டி குளிக்க நள்ளியைத் திருக்கினேன்.

"சின்டெக்ஸ்" தொட்டியின் மேலிருந்த என் தந்தையின் நீல நிறச்சட்டை கீழே விழுந்தது. அந்த சட்டையிலிருந்து "க்ளிங்" என்ற சத்தத் தோடு சுற்றி நின்றது "தங்க நிற ஐந்து ரூபாய்" அந்த நாணயத்தை கண்டவுடன் என்னலாமோ தோன்றியது.  இதை வயிறு என்னும் திறந்த உணவு உண்டியலுக்கு பயன்படுத்தலாமா அல்லது மூடிய பெட்டியான சில்லறை உண்டியலுக்கு பயன்படுத்தலாமா என சிந்தித்தேன்.

"சீக்கிரம் வாடா! " என அம்மா கூற

நான் இதை பிறகு பார்ப்போம் என ஓரம் தள்ளி வைத்து குளித்து "வெள்ளை" நிறத் துண்டை எடுத்து துடைத்து இறுக்க கட்டிக் கொண்டு நின்றேன் எனினும் கண்ணை கட்டியது காசு தான். கையில் எடுத்து படியில் இறங்கினேன். மேலிருந்து கீழ் இறங்க பதினைந்து படிகள் இருந்தது ஒவ்வொரு படியிலும் காலடி படும் போது ஒவ்வொரு பகல் கணவு தோன்றியது. கடைசி படியில் கால்களை நிலைநிறுத்துகையில் பக்கத்து வீட்டிலிருந்து வாலி ஐயாவின் பாடலான "கண்போன போக்கிலே கால் போகலாமா.........." பாடல் ஒலித்தது. இந்த வரிகளை நன்கு உணர்ந்தேன்.

 இப்படிப்பட்ட மூளை, மனப் போட்டியில் வெற்றியைத் தழுவியது மூளையா? மனமா? என எனக்குத் தெரியாது ஆனால் நான் அறிந்தவரை வெற்றி பெற்றது நாணயமும் நேர்மையும்.

"ஆம்!" நான் அதை தாயிடம் கொடுத்துவிட்டேன்.

"ஏது இது?" என எகன மோகனாய் கேள்விக் கேட்டார்

"ஐயோ!" என திகைத்து கூறினேன்.
"மேலிருந்து விழுந்தது" என்று

"என்ன சொல்ற?"

"அப்பா பையிலிருந்து விழுந்தது"என எதார்த்தமாக கூறினேன்.

"சரி போய் படி" என்றார் அம்மா

"இயற்பியல்" புத்தகத்தை எடுத்தேன்

அதில் அறிந்தேன் "மாய ஒலி" என்ற ஒருச் சொல்லை.

நேற்று தோன்றிய நாய், பூனை அமானுசியம் இதனாலா.. என வியந்தேன்......

அறிந்தும் தெளிந்தும் அடுத்த நொடியைத் தொடங்கினேன்.

Comments

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ