இனையக் காதலன்...

பகிரியில் காதலித்தேன்
பக்க கவிதைகள் பேசவில்லை
கனாக்காணும் காலங்கள் என் வாழ்வில் கிடையாது
காணொளி காதல்கள்
என் வாழ்வில் பலவுண்டு
புலணத்தின் புரட்டலில் என் உரையாடல் பல இருக்கு
அன்பின் பரிமமாற்றம் அளவும் இல்லையடா - அன்பை
அளக்க என்னவில்லை
அளந்தாலும் ஒன்றும் இல்லை
ஊமையாய் இருந்துவிட்டு
குரலஞ்சல் அனுப்புகிறாள்
உன்னை நான் காதலிக்கேன்
உன் பதில் என்னவென்று
திகைத்து நின்றேனா
தித்தித்து நின்றேனா
நின்றதே தெரியவில்லை
நித்தமும் புரியவில்லை
தூரத்தில் இருந்தாளே
கைக்குள்ளே சிரித்தாளே
சித்திர புகைப்படமாக....
எண்ணை மாற்றி அழைத்தே
என்னை அவள் காதலித்தால்
என்ன காதல் இதுவென்று
மனித குலம் பேசுதடா
பேச்சுக்கள் புதிதல்ல
கேட்பதும் புதிதல்ல
காதல் தான் புதிதென்று
காத்திருந்தேன் புலணத்தில்
காதலி குரல் கேட்க
குரலஞ்சல் எதிர் நோக்கி
என் இதயத்தை தின்றுவிட்டாள்
அவள் இதயத்தில் கக்கிவிட்டாள்...
காதோரம் அழைத்துவிட்டு
கால்கடுக்க அலையவிட்டாள்
கானொளி அழைப்பில் - வந்து
இதுபோதும் என்றுரைத்தாள்
நான்
மெழுகாக உருகினாலும்
கதிராக கருகினாலும்
என் காதலி மதிமுகம்
மட்டும் கடுகளவும் கரையவில்லை
புன்னகை ஒன்று செய்து
என் மனதை எடுத்துக்கொண்டாள்
வென்ற மனதையும்
மின்னஞ்சலில் பெற்றுக்கொண்டாள்
முத்தங்கள் கேட்டு - நானும்
மூவேளை காத்திருந்தேன்
சத்தங்கள் இல்லாமல்
படமாக தந்துவிட்டாள்
அடச்சே
என்ன இது காதல்
என்று அத்தனையும்
விட்டு விட்டு
அவள் மனம் தேடி
நானும் ஆனேன் நாடோடி......

                            -  கதிர்

Comments

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ