Posts

அதெந்து

கைகளை நீட்டிக் காட்டி அதட்டிச் சொல்வேன் "அதெந்து" என்று!                - கதிர் கார்க்கி

காதல்

காணாத உன்னை கண்டவுடனே காணாத காட்சியெல்லாம் கனவுக்குள்ளே             - கதிர் கார்க்கி

காலம் நமதே

 கணவுகள் மெய்ப்படும் கலையாதே காயம் வருடிடும் கலங்காதே காலம் நமதே!                 - கதிர் கார்க்கி

புதுக்கவிதை

ஒதுக்கப்படுவதற்க்குள்  ஒதுங்கி விடு   ஒரு மரியாதை கிடைக்கும்               - கதிர் கார்க்கி

டோபமைனே!

 ஆசைகள் ஏதுமின்றி அடிமையாய் மாறுகிறேன் காரணம் நீதானோ டோபமைனே!                   - கதிர் கார்க்கி

தேடுமா?

 யாருமில்லா உலகமொன்று எனக்கென கிடைக்குமா? அங்கு ஈகை இன்பம் இரக்கம் நிரந்தரமாகுமா? இல்லை அங்கும் என்னுயிர் இவற்றைத் தேடுமா?                 - கதிர் கார்க்கி
 கேட்டுப் பெறும் அன்பு! ஈகை அல்ல பீடை தான்                 - கதிர் கார்க்கி

ஹைக்கூ

 இமயம் இலக்கானால் இமையும் இம்சையிடும் இருந்தாலும் இக்கணம் இருந்திடாதே                  - கதிர் கார்க்கி

ஹைக்கூ

 காதலித்து காதலித்து காயமுறுகிறேன் காதலிக்கிறேன் காயத்தை காயமுறுகிறேன் காதலால்                    - கதிர் கார்க்கி

ஹைக்கூ

 பேசி பேசி பேச்சை நிறுத்துகிறேன் உன்னிடம் பேச்சைத் தொடரவே!                - கதிர் கார்க்கி

ஹைக்கூ

 நினைவுச் சக்கரதால் என் நிகழ்காலம் கொல்லாதே எதிர்காலம் புறப்படுகிறேன்              - கதிர் கார்க்கி

ஐந்து ரூபாய் நாணயம்

Image
வணக்கம் தோழமைகளே,                                         நான் சில சிறுகதைகளை எனது குறிப்பேட்டில் எழுதி இருக்கிறேன். ஆனால் முதன் முறையாக தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்துள்ளேன் ஆதரவு தாருங்கள்.. ஐந்து ரூபாய்........                           அமைதியான இரவு யாரும் இல்லா மொட்டை மாடி. தனிமையில் படுக்கை விரிப்புகளுடன் சென்றேன் அந்த மாடிக்கு படுத்து உறங்க. உறங்கச் சென்ற எனக்கு உறக்கம் வரவில்லை. தலைக்கு அருகில் இருந்த கைபேசியைப் பார்த்தேன். அதை கையில் எடுத்தேன் அது என்னைப் பார்த்தது பார்த்தவுடன் திறந்தது ஏனெனில் முகத்திறப்பு அமைப்பு அமலில் இருந்தது. அது திறக்காமல் இருந்தாலும் "மணி" பார்த்து வைத்திருப்பேன். திறந்தவுடன் தெரிந்தது புலணத்தின் (whats app) குறுஞ்செய்திகள். " ஆயிரத்து ஐந்நூற்று ஐப்பத்தைந்து " என மேல பார்த்தவுடன் உடனே செய்திகளை ஆரம்பித்தேன். " டேய் " , " டேய் " விக்கி.......... என்ற அழைப்புச் சத்தம் கேட்டு ...

ஒரு சொல் கவிதை

நடமாடும் நிலவு அவள் !!.....               - கதிர் சென்றேன் செய்தேன் வென்றேன்            - கதிர் நீ வா தீ   - கதிர் போய் வா காதலே       - கதிர் காயங்கள் தீர்க்கும் காதல்       - கதிர் மண்ணிலே முத்தமிடும் நிலவு !!!....           - கதிர் வேட்டி சட்டையோடு பாம்பொன்று              - கதிர் பட்டு உடுத்திய சிட்டு       - கதிர் வேலை செய்யும் காளை          - கதிர் இதயத்தில் இடம்பிடித்தால் இளந்தென்றல்                - கதிர் கயிறிட்டு இழுத்தாள் இதயத்தை            - கதிர் கருப்பு வைரம் வீதியிலே         - கதிர் கோடையில் மழையாய் இன்பம்          - கதிர் காலத்தின் கருவாக க(வி)தை        - கதிர் முகம் மாற்ற...

ஹைக்கூ

சுவர் இன்றி சித்திரம் வரைகிறேன் என் மனச் சுவரில்                           - கதிர்

ஹைக்கூ

காதலி முகம் கண்டவுடன் மதி இழந்தான் அழகிய மதிவானன்                               - கதிர்

ஹைக்கூ

கள்ள சிரிப்பு செய்து காரிருள் வெளுக்க வைத்தால் கள்ளச்சி !!!....                                 - கதிர்

ஹைக்கூ

தேன் போல சுவைக்கிறேன் தனித் தமிழை உணர்கிறேன் உள்ளத்தில்                                 - கதிர்

ஹைக்கூ

காட்டில் பரவும் தீயைப் போல ஓடுகிறது புரளிகள் ஒளியோடு...                             - கதிர்

ஹைக்கூ

தலைப்பு இன்றி எழுதுகிறேன் தரணியில் உலர்கிறேன் நான் கவிஞன் !                           - கதிர்

ஹைக்கூ

காயங்கள் அலைந்து கலைந்தது குருதி ஆற்றில் கல் எறியப்பட்டு                            - கதிர்