ஐந்து ரூபாய் நாணயம்

வணக்கம் தோழமைகளே, நான் சில சிறுகதைகளை எனது குறிப்பேட்டில் எழுதி இருக்கிறேன். ஆனால் முதன் முறையாக தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்துள்ளேன் ஆதரவு தாருங்கள்.. ஐந்து ரூபாய்........ அமைதியான இரவு யாரும் இல்லா மொட்டை மாடி. தனிமையில் படுக்கை விரிப்புகளுடன் சென்றேன் அந்த மாடிக்கு படுத்து உறங்க. உறங்கச் சென்ற எனக்கு உறக்கம் வரவில்லை. தலைக்கு அருகில் இருந்த கைபேசியைப் பார்த்தேன். அதை கையில் எடுத்தேன் அது என்னைப் பார்த்தது பார்த்தவுடன் திறந்தது ஏனெனில் முகத்திறப்பு அமைப்பு அமலில் இருந்தது. அது திறக்காமல் இருந்தாலும் "மணி" பார்த்து வைத்திருப்பேன். திறந்தவுடன் தெரிந்தது புலணத்தின் (whats app) குறுஞ்செய்திகள். " ஆயிரத்து ஐந்நூற்று ஐப்பத்தைந்து " என மேல பார்த்தவுடன் உடனே செய்திகளை ஆரம்பித்தேன். " டேய் " , " டேய் " விக்கி.......... என்ற அழைப்புச் சத்தம் கேட்டு ...